Friday, March 4, 2011

அன்புக்கும் இஸ்லாத்துக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கா?

குரானை படிச்சு அன்புனா என்னனு தெரிஞ்சிக்கலாமாம்
கதை விடுறதுக்கு அளவில்லாம போய்ட்டிருக்கு

ஒரு அமெரிக்க கத்தோலிக்கர் இஸ்லாமியராக மாறிவிட்டாராம்... அதுநடந்து பல ஆண்டுகள் ஆகிறது. அதற்கு அவா் கூறும் காரணம் என்னவென்று படிக்கலாம் என்று பார்த்தேன். சொல்லிக்கொள்ளும்படி அதில் ஒன்றுமில்லை. வழக்கம் போல கதைகள் தான். அதில் அன்பு என்றால் என்ன என்பதைப் பற்றி குரான் படித்து தான் தெரிந்து கொண்டாராம். அப்படி என்னதான் குரான் சொல்லுதுன்னு பார்த்தா ஒன்னுமே கிடைக்கல...


1 கொரிந்தியர்
13-ம் அதிகாரத்தை அவர் படிக்காதவர்னு நினைக்கிறேன்.

சரி அப்படி என்னத்தான் குரான்ல அன்பைப் பத்தி சொல்லியிருக்காங்கன்னு பார்க்கலாம்னு குரானை இணையத்தில் பாரத்தேன். முழுவதும் படித்து பார்க்க அந்த புத்தகத்தில் ஒன்றுமில்லை. வழக்கமா நம்ம இஸ்லாமிய நண்பா்கள் செக்ஸ் இன் பைபிள்னு தேடுவது போல குரான்ல அன்புன்னு தேடிப் பார்த்த இருபத்தி எட்டு இடத்தில் தான் அன்பு என்ற வார்த்தை வந்தது. அதில் ஒரு இடத்தில் கூட அன்பைப் பற்றி அவர்கள் சொல்லலை. 



இஸ்லாம் அமைதி மார்க்கம்னு சொல்லனும்... இஸ்லாம் அன்பைப் போதிக்குதுன்னு சொல்லனுன்னு ஊரை ஏமாத்துறதுக்காக இங்க இப்படி கப்ஸா விடுறாங்கன்னு புரியுது... சரி நம்ம விவிலியத்தில் அன்பைப் பற்றி என்ன சொல்லியிருக்காங்கன்னு பார்க்கலாம்...

1 கொரிந்தியர்
13-ம் அதிகாரம்
மண்ணோர் மொழிகளிலும் விண்ணோர் மொழிகளிலும் நான் பேசினாலும், அன்பு எனக்கு இல்லையேல் ஒலிக்கும் வெண்கலமும், ஓசையிடும் தாளமும் ஆவேன்.

இறைவாக்கு வரம் எனக்கு இருப்பினும் மறைபொருள் யாவும் எனக்குத் தெரிந்தாலும் அறிவு அனைத்தும் எனக்கு இருந்தாலும் மலைகளைப் பெயா்த்தகற்றும் அளவுக்கு விசுவாசம் என்னிடம் நிறைந்திருப்பினும் அன்பு இல்லையேல், நான் ஒன்றுமில்லை.

அன்பு பொறுமையுள்ளது, பரிவுள்ளது. அன்பு அழுக்காறு கொள்ளாது. பெருமை பேசாது, இருமாப்பு அடையாது.

இழிவானதை செய்யாது, தன்னலத்தைத் தேடாது, சீற்றத்திற்கு இடந்தராது, வா்மம் வைக்காது.

அநீதியைக் கண்டு மகிழ்வுறாது, உண்மையைக் கண்டு உளம் மகிழும்.
அனைத்தையும் தாங்கிக்கொள்ளும், பிறா் மீது நல்லெண்ணம் இழப்பதில்லை, நம்மிக்கையில் தளா்வதில்லை, அனைத்தையும் பொறுத்துக்கொள்ளும்,

அன்புக்கு என்றும் முடிவு இராது...

Monday, January 31, 2011

நரகத்தில் பெண்கள் தான் இருப்பாங்களாம்

இஸ்லாம் சொல்லுது

நரகத்தில் யார் அதிகமாக இருப்பார்கள்?

பாவிகள்னு நீங்க சொல்லுவீங்க. ஆனால் முகமது அவா்கள் என்ன சொல்றார்னா... பெண்கள் தான் அதிக அளவில் நரகத்தில் இருப்பாங்களாம். நான் கதை விடுறேன்னு நினச்சிக்காதீங்க அவங்க புகாரில இருந்து நான் படிச்சதை சொல்றேன். இஸ்லாமியா்கள் போல கதை விடுவேன், ஆதாரம் கொடுக்கமாட்டேன்னு நினச்சிக்காதீங்க, இதோ அந்த புகாரியில் இருந்து எடுக்கப்பட்டது...

29. 'எனக்கு நரகம் காட்டப்பட்டது. அதில் பெரும்பாலோர் பெண்களாகக் காணப்பட்டனர். ஏனெனில், அவர்கள் நிராகரிப்பவர்களாக இருந்தனர்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியபோது, 'இறைவனையா அவர்கள் நிராகரிக்கிறார்கள்?' எனக் கேட்கப்பட்டதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'கணவனை நிராகரிக்கிறார்கள். உதவிகளை நிராகரிக்கிறார்கள். அவர்களில் ஒருத்திக்குக் காலம் முழுவதும் நீ நன்மைகளைச் செய்து கொண்டேயிருந்தது, பின்னர் (அவளுக்குப் பிடிக்காத) ஒன்றை உன்னிடம் கண்டுவிட்டாளானால் 'உன்னிடமிருந்து ஒருபோதும் நான் ஒரு நன்மையையும் கண்டதில்லை' என்று பேசிவிடுவாள்' என்றார்கள்" என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். Volume :1 Book :2

இதுக்கு மேலயும் சந்தேகம் இருந்தா, தமிழ் குரான் டாட் காம்ல போய் பாருங்க... இதோ அதன் லிங்

இதுமட்டுமில்ல கணவன் மனைவியை அடிக்கலாம் என்று அனுமதியை கொடுக்கிறது இஸ்லாம். குரானை மொழியாக்கம் செஞ்சவங்க அதை கொஞ்சம் மாத்தியிருக்காங்க, அதாவது மனனவியை லேசா அடிக்கலாம்னு... அதையும் பாருங்க.

4:34. (ஆண், பெண் இருபாலாரில்) அல்லாஹ் சிலரை சிலரைவிட மேன்மைப்படுத்தி வைத்திருக்கிறான். (ஆண்கள்) தங்கள் சொத்துகளிலிருந்து (பெண் பாலாருக்காகச்) செலவு செய்து வருவதினாலும், ஆண்கள் பெண்களை நிர்வகிக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர். எனவே நல்லொழுக்கமுடைய பெண்டிர் (தங்கள் கணவன்மார்களிடம்) விசுவாசமாகவும், பணிந்தும் நடப்பார்கள். (தங்கள் கணவன்மார்கள்) இல்லாத சமயத்தில், பாதுகாக்கப்பட வேண்டியவற்றை, அல்லாஹ்வின் பாதுகாவல் கொண்டு, பாதுகாத்துக் கொள்வார்கள்; எந்தப் பெண்கள் விஷயத்தில் - அவர்கள் (தம் கணவருக்கு) மாறு செய்வார்களென்று நீங்கள் அஞ்சுகிறீர்களோ, அவர்களுக்கு நல்லுபதேசம் செய்யுங்கள்; (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களைப் படுக்கையிலிருந்து விலக்கிவிடுங்கள்; (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களை (இலேசாக) அடியுங்கள். அவர்கள் உங்களுக்கு வழிப்பட்டுவிட்டால், அவர்களுக்கு எதிராக எந்த வழியையும் தேடாதீர்கள் - நிச்சயமாக அல்லாஹ் மிக உயர்ந்தவனாகவும், வல்லமை உடையவனாகவும் இருக்கின்றான்.

ஆனா அதுக்கு அப்படியே ஆப்போஸிட்டா நம்ம விவிலியத்தில் என்ன சொல்லியிருக்காங்கன்னு பாருங்க...

கலாத்தியா் 3;28 வசனம்

இனி யூதனென்றும் கிரேக்கனென்றும் இல்லை, அடிமையென்றும் உரிமைக் குடிமகனென்றும் இல்லை, ஆண் என்றும் பெண்ணென்றும் இல்லை, கிறிஸ்துவுக்குள் நீங்கள் அனைவரும் ஒருவரே.



இப்போ புரிஞ்சுதா இஸ்லாம் எவ்வளா இனிய மார்க்கம்னு...

Saturday, January 15, 2011

குழப்பத்தின் மறுபெயர்? அதுதாங்க இஸ்லாம்...

உலகத்தை படைத்தது ஆறு நாளா இல்லை எட்டுநாளா

அடுத்த புளுகு

குரானில் உள்ள வார்த்தைகளை அல்லா இறக்கினார்னு கப்ஸா விடுபவா்களே... அதனால குரான்ல எந்த முரண்பாடும் இருக்காதுன்னு சொல்லிக்குறவங்களே... இதோ இன்னொரு முரண்பாடு உங்களுக்காக....

குரான்னின் 7:54 ஸூரா சொல்லுறதை படிச்சு பாருங்க...

7:54. நிச்சயமாக உங்கள் இறைவனாகிய அல்லாஹ் தான் ஆறு நாட்களில் வானங்களையும், பூமியையும் படைத்துப் பின் அர்ஷின் மீது தன் ஆட்சியை அமைத்தான் - அவனே இரவைக் கொண்டு பகலை மூடுகிறான்; அவ்விரவு பகலை வெகு விரைவாக பின் தொடர்கின்றது; இன்னும் சூரியனையும்; சந்திரனையும், நட்சத்திரங்களையும் தன் கட்டளைக்கு - ஆட்சிக்குக் - கீழ்படிந்தவையாக(ப் படைத்தான்); படைப்பும், ஆட்சியும் அவனுக்கே சொந்தமல்லவா? அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய (அவற்றைப் படைத்து, பரிபாலித்துப் பரிபக்குவப்படுத்தும்) அல்லாஹ்வே மிகவும் பாக்கியமுடையவன்.

இந்த ஸூராவுல உலகத்தை ஆறு நாளில் படைத்தான் அல்லான்னு சொல்லுறீங்க. ஒப்புக்கிறீங்களா? அல்லா ஆறு நாள்ள உலகத்தை படச்சிட்டானா? அப்புறம் மாத்தி பேசக்கூடாது சரியா....

இப்போ வாங்க அடுத்த ஸூராவுக்கு

41:9. “பூமியை இரண்டே நாட்களில் படைத்தவனை நிராகரித்து அவனுக்கு இணைகளையும் நிச்சயமாக நீங்கள் தான் ஏற்படுத்துகிறீர்கள்? அவன் அகிலத்தாருக்கெல்லாம் இறைவன்” என்று (நபியே!) கூறுவீராக.

இப்போ என்ன சொல்றீங்க... ஓ உலகத்தை படைக்கத்தான் ஆறு நாள் ஆச்சு. பூமியை இரண்டே நாளில் படைத்துவிட்டார்னு சொல்லப்போறீங்களா... வாங்க தொடா்ந்து படிப்போம்...

41:9. “பூமியை இரண்டே நாட்களில் படைத்தவனை நிராகரித்து அவனுக்கு இணைகளையும் நிச்சயமாக நீங்கள் தான் ஏற்படுத்துகிறீர்கள்? அவன் அகிலத்தாருக்கெல்லாம் இறைவன்” என்று (நபியே!) கூறுவீராக.

41:10. அவனே, அதன் மேலிருந்து உயரமான மலைகளை அமைத்தான்; அதன் மீது (சகல விதமான) பாக்கியங்களையும் பொழிந்தான்; இன்னும், அதில் அவற்றின் உணவுகளை நான்கு நாட்களில் சீராக நிர்ணயித்தான்; (இதைப் பற்றி) கேட்கக் கூடியவர்களுக்கு (இதுவே விளக்கமாகும்).

41:11. பிறகு அவன் வானம் புகையாக இருந்தபோது (அதைப்) படைக்க நாடினான்; ஆகவே அவன் அதற்கும் பூமிக்கும்: “நீங்கள் விருப்புடனாயினும் அல்லது வெறுப்பிருப்பினும் வாருங்கள்” என்று கூறினான். (அதற்கு) அவையிரண்டும் “நாங்கள் விருப்புடனேயே வருகின்றோம்” என்று கூறின.

41:12. ஆகவே, இரண்டு நாட்களில் அவற்றை ஏழு வானங்களாக அவன் ஏற்படுத்தினான்; ஒவ்வொரு வானத்திற்கும் அதற்குரிய கடமை இன்னதென அறிவித்தான்; இன்னும், உலகத்திற்கு சமீபமான வானத்தை நாம் விளக்குகளைக் கொண்டு அலங்கரித்தோம்; இன்னும் அதனைப் பாதுகாப்பாகவும் ஆக்கினோம்; இது யாவரையும் மிகைத்தவனும், ஞானம் மிக்கோனுமாகிய (இறை)வனுடைய ஏற்பாடேயாகும்.

இப்போவாது புரிஞ்சுதா?

ஏழாவது ஸூரா படி உலகத்தைப் படைக்க அல்லாவுக்கு ஆறு நாள் ஆச்சு... (பைபிளில் இருந்து சுட்டது தான் இந்த கதையும்)
நாற்பத்தி ஒன்றாவது ஸூரா படி பூமியை மட்டும் படைக்க இரண்டு நாள், (பூமியை மட்டும் படைக்க இரண்டு நாள் ஆச்சுன்னா, சூரியன், நிலா மற்ற கிரகங்கள், பால்வெளிவீதியை படைக்க எத்தனை வருஷம் ஆகியிருக்கும் அல்லாவுக்கு) பூமியில் அவற்றின் உணவுகைள நான்கு நாட்களில் நிர்ணயித்தான், அதாவது ஆறு நாள் ஆகிடுச்சு. அதுக்கு அப்புறம் ஏழு வானங்களை ஏற்படுத்த இரண்டு நாள்... மொத்தம் எட்டு நாள்...

எல்லாம் அறிந்த அல்லா வந்து நபிகிட்ட சொல்லி இறக்கின குரானில் எவ்வளவு முரண்பாடு... படைத்த அல்லாவுக்கு கணக்கு தெரியலையா? இல்லை கதைவிடும் நபி அவா்களுக்கு கணக்கு தெரியலையா? ஏன் இந்த குழப்பம்... இதில் இருந்து குரான் கப்ஸா கதைன்னு ஒப்புக்கிறீங்களா?

VisitorMap.org

Free Visitor Maps at VisitorMap.org
Get a FREE visitor map for your site!

Friday, January 14, 2011

இஸ்லாம் ஒரு குழப்ப மார்க்கம்

பைபிளில் இருந்து திருடி, அதை உல்டா செய்து, கடவுள் சொன்னதுன்னு கப்ஸா விட்டுக்கொண்டிருக்கும் இஸ்லாமின் மற்றுமொறு முரண்பாட்டு...
மனிதனை கடவுள் படைத்தார். மண்ணில் இருந்து படைத்தார்னு பைபிள் சொல்லுது... அதை காப்பி அடிச்ச இஸ்லாமும் அதையே சொல்கிறது....

குரானில்...

15:26. ஓசை தரக்கூடிய கருப்பான களி மண்ணால் மனிதனை நிச்சயமாக நாமே படைத்தோம்.

உடனே விவிலியமும், குரானும் ஒரே விஷயத்தைத்தான் சொல்லுதுன்னு தப்பு கணக்கு போட்டுடாதீங்க...

இஸ்லாமின் திருட்டுத்தனம் அடுத்த ஸூராவுலயே தெரிஞ்சுடுது... அடுத்த ஸூரா வரைக்கும் கூட தன்னுடைய தப்பை மறைக்க முடியல இஸ்லாமால...

அடுத்த ஸூரா இதோ...

16:4. அவன் மனிதனை இந்திரியத்துளியினால் படைத்தான்; அப்படியிருந்தும் மனிதன் பகிரங்கமான எதிரியாக இருக்கின்றான்.

மனிதனை படைத்த அடிப்படை விஷயத்துலயே குழப்பு குழப்புன்னு குழப்புறீங்களே, இதுல எந்த ஸூரா உண்மைன்னு சொல்லுவீங்களா இஸ்லாமியா்களே... குரான் குழப்பலைன்னு, உங்களால மறுக்க முடியுமா என்ன?